தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகளை தவறான வழியில் கொண்டுச் செல்ல எதிர்க்கட்சிகள் சதி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகளை தவறான வழியில் கொண்டுச் செல்ல எதிர்க்கட்சிகள் சதிசெய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

By

Published : Dec 15, 2020, 8:32 PM IST

PM Modi
PM Modi

குஜராத் மாநிலம் கட்ச் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் உரையாற்றிய மோடி புதிய வேளாண் சட்டம் குறித்து பேசினார்.

அதில், டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகளை தவறான வழியில் கொண்டுச் செல்ல எதிர்க்கட்சிகள் சதிசெய்து வருகின்றன. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் தங்கள் நிலத்தை இழக்க நேரிடும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. நீங்கள் பால் விற்பனை செய்வதால் உங்களின் பால் பண்ணை உரிமையாளர்கள் மாடுகளை பறிந்துக்கொண்டார்களா என்ன,

முன்பு, எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருந்தபோது, இந்த சீர்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தற்போது முரணாக பேசி விவசாயிகளை ஏமாற்ற பார்க்கின்றனர். விவசாயிகளின் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க அரசு 24 மணிநேரமும் தயாரகவுள்ளது என்றார்.

இதையும் படிங்க:குடியரசு தின கொண்டாட்டம்: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் போரிஸ் ஜான்சன்

ABOUT THE AUTHOR

...view details