மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில், பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
'ஐசியூவில் எதிர்க்கட்சியினர்' மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் - மக்களவைத் தேர்தல்
டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளுக்கு பிறகு அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் அரசியல் ஐசியூவில் அட்மிட்டாகியுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Central Minister Giriraj Singh
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ட்விட்ரில் பதிவிட்டுள்ளதாவது, 'தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை பார்த்தும் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் அரசியல் ஐசியூவில் அட்மிட்டாகியுள்ளனர்' இவ்வாறு அதில் கூறியுள்ளார்.