உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று, தெலங்கானா மாநிலத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இவற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல் தலைமைச் செயலகத்தை இடித்துவிட்டு, புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதில் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் ஆர்வம் காட்டுவதாக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலங்கானா பாஜக தலைவர் கே. லக்ஷ்மன் கூறும்போது, "கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மும்முரமாக உள்ளார். இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ச, ஜனநாயக விரோத முடிவு தெலங்கானா மக்களுக்கு ஒரு பாடம்.