தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊழியர்கள் போராட்டத்தால் வங்கி பணிகள் பாதிக்கும் - எஸ்பிஐ தகவல் - ஊழியர்கள் போராட்டத்தால் வங்கி பணிகள் பாதிக்கும்

டெல்லி: ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், வங்கி பணிகள் பாதிக்கப்படும் என எஸ்பிஐ கூறியுள்ளது.

ஊழியர்கள் போராட்டத்தால் வங்கி பணிகள் பாதிக்கும் -எஸ்பிஐ தாக்கல்!
ஊழியர்கள் போராட்டத்தால் வங்கி பணிகள் பாதிக்கும் -எஸ்பிஐ தாக்கல்!

By

Published : Jan 24, 2020, 4:36 PM IST

2020 - 2021ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜனவரி 31ஆம் தேதியிலும், பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதியிலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் அதே இரு நாள்களில் மத்திய அரசிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து எஸ்பிஐ, மும்பை பங்கு சந்தைக்கு கடிதம் ஒன்றை அணுப்பியுள்ளது. அதில், “ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, இயல்பாக வங்கிகள் செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் வங்கி பணிகள் ஓரளவிற்கு பாதிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...பாம்புகளிடமிருந்து பரவும் கொரோனா வைரஸ்?

ABOUT THE AUTHOR

...view details