கரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களை தாயகம் அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களில் மீட்டு வர ஏற்பாடுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.
இந்த மீட்பு நடவடிக்கைகளுக்காக, இந்தியக் கடற்படையைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் துபாய், மாலத்தீவு விரைந்துள்ளன. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்களை தாயகம் மீட்டுவருவதற்காக இந்தியக் கடற்படை தொடங்கியிருக்கும் ‘ஆபரேஷன் சமுத்ரா சேது’வின் ஒரு பகுதியாக விசாகப்பட்டினத்தைத் தளமிடமாகக் கொண்டிருக்கும் ஐ.என்.எஸ். ஜலஷ்வா மாலத்தீவின் தலைநகர் மாலே சென்றடைந்துள்ளது.
இது தொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீட்புப் பணிகளுக்காக பிரத்யேகமாக இயக்கப்படும் இந்த ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பலில், 8894 டன் எடையை ஏற்றலாம். ஒட்டுமொத்தமாக அதிகபட்சம் 16590 டன் வரை எடையை இக்கப்பல் தாங்கும். ஐஎன்எஸ் ஜலஷ்வா 20 நாட் வேகத்தில் (37 கிலோமீட்டர் வேகத்தில்) செல்லக்கூடியது.