தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாய் - மகன்

அமராவதி (ஆந்திரா): ஆந்திர காவல் துறையின் "ஆபரேசன் முஸ்கான் கோவிட்-19" திட்டத்தின் மூலம், ஆந்திராவில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தாய்-மகன் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

operation-muskaan-mother-reunites-with-son-after-four-years-in-andhra-pradesh
operation-muskaan-mother-reunites-with-son-after-four-years-in-andhra-pradesh

By

Published : Jul 19, 2020, 1:33 AM IST

ஆந்திரப் பிரதேசத்தில் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுப்பதற்காக "ஆபரேசன் முஸ்கான்"என்ற பெயரிலான திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம், தற்போது "ஆபரேசன் முஸ்கான் கோவிட்19" என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில காவல் துறை தலைமை இயக்குநர் கெளதம் சவாங், இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு சிறப்புக் குழு ஒன்றை அமைத்து பணியைத் தொடங்கினார்.

இதில், ’ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவில் வசிக்கும் போபாஸ்ரீ லலிதாவிற்கு தனது இரண்டாவது மகன் சீனிவாஸ் பிறந்தவுடன் கணவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, லலிதா வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். சில சமயங்களில் தனது மகன்களுக்கு உணவளிக்க ஒரு கந்தல் எடுப்பவராக செயல்பட்டார்.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டில், சீனிவாஸ் தவறுதலாக பாலகொல்லுவில் ரயிலில் ஏறி விஜயவாடா ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். பின்பு, ரயில்வே காவல் துறையினர் சீனிவாஸை மீட்டு விஜயவாடாவில் உள்ள ஒரு குழந்தைப் பராமரிப்பு மையத்திற்குக் கொண்டு சேர்த்தனர்.

சீனிவாஸ் தற்போது குழந்தைப் பராமரிப்பு மையத்திடம் அவர் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவைச் சேர்ந்தவர் என்பதைக் கூறியுள்ளார்.

இதையடுத்து, விஜயவாடா சி.டபிள்யூ.சி மேற்கு கோதாவரியின் குழந்தைகள் நலக் குழுவுக்கு (சி.டபிள்யூ.சி) தெரிவித்தது. பின்னர் அலுவலர்கள் அவரது தாயை வெற்றிகரமாக கண்டுபிடித்து, நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அவர்களை மீண்டும் ஒன்றிணைத்தனர்.

இதுகுறித்து, சவாங் கூறும்போது,"கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தாய்-மகன் இருவரையும் மீண்டும் ஒன்றிணைக்க உதவுவது மிகவும் மன நிறைவைத் தருகிறது. இது போன்ற விஷயங்கள் எங்களுக்கு மிகுந்த திருப்தியைத் தருகின்றன,

மீட்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இதயத்தைத் துடைக்கும் கதை உள்ளது. இது பாதிக்கப்படக் கூடியவர்களின் வாழ்க்கையில் இந்த வகையான வித்தியாசத்தை ஏற்படுத்த, இந்த முயற்சி தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக எங்கள் முன்னணி வரிசை வீரர்களைப் பாராட்ட இந்த வாய்ப்பையும் பயன்படுத்த விரும்புகிறேன் "என்று கூறினார்.

இந்தத் திட்டத்தில், கடந்த 72 மணி நேரத்திற்குள் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதுவரை 2,739 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். இந்தத் திட்டம் தொடர்ந்து வரும் 20ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும். மீட்கப்பட்ட குழந்தைகளுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details