தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீடு திரும்பிய 22 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள்

டெல்லி: சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 22 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவரவரது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

By

Published : May 21, 2020, 9:53 AM IST

22 லட்சம் புலம் பெயர்ந்த தொழிளாலர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு!
22 லட்சம் புலம் பெயர்ந்த தொழிளாலர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு!

கரோனாவால் நாடு முழுவதும் தொடர்ந்து நான்காவது முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் கடந்த மே 1 ஆம் தேதியிலிருந்து இதுவரை 22 லட்சம் பேர் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உத்தரப் பிரதேசத்திற்கு 912 ரயில்களும், பிகார் மாநிலத்திற்கு 398 ரயில்களும், குஜராத்திற்கு 583 ரயில்களும், மகாராஷ்டிராவிற்கு 320 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. மேலும் ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஒரு பயணத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 700 குடிபெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி செல்கிறது.

இருப்பினும் சிறப்பு ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் தொழிளாலர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மறுபுறம் மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் ரயில் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்காததால் தொழிலாளர்கள் நடைபயணம் மேற்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த மே 19 அன்று வழக்கமாக நாள் ஒன்றுக்கு இயக்கப்படும் ரயில்களை காட்டிலும் நான்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டதாக அதாவது 204 ரயில்கள் இயக்கப்பட்டன என்று மத்திய ரயில்வே துரை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details