விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசுகையில், "விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டால், ஒட்டுமொத்த நாட்டின் ஆற்றலைக் கொண்டு, விண்வெளி தொழில் நுட்பங்களின் திறனைக் கூட்டமுடியும்.
இது விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சர்வதேச விண்வெளித் துறையில் இந்தியாவை முக்கிய நாடாக உருவெடுக்கச் செய்ய வழிவகுக்கும்.
சமுதாய-பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள விண்வெளித்துறை சீர்திருத்தங்களின் மூலம், விண்வெளித்துறை சார்ந்த சேவைகளில் தனியார் நிறுவனங்களுக்குக் கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படும்.