இந்தியப் பங்குச் சந்தைகள் வர்த்தகத்தின் நிறைவு நாளான இன்று தொடக்கத்திலேயே 300 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து சிவப்பு கோடுக்கு சென்றது.
மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சென்செக்ஸ் 351.32 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 27,913.99 ஆக இருந்தது. இதேபோல், தொடக்க அமர்வில் என்.எஸ்.இ. நிஃப்டி 49.55 புள்ளிகள் குறைந்து 8,204.25 ஆக இருந்தது.
ராம நவமியை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை இரண்டும் மூடப்பட்டன.