கேரள மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 50 ஆண்டு காலத்தை உம்மன் சாண்டி நிறைவு செய்துள்ளார். கடந்த 11 தேர்தல்களில் கோட்டையத்தில் உள்ள புட்டுப்பள்ளி தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சாண்டி, 2020 செப்டம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி 50 ஆண்டுகளாக கேரள சட்டப்பேரவை உறுப்பினராக செயலாற்றிவருகிறார்.
சட்டபேரவை உறுப்பினராக பொன்விழா கொண்டாடும் அவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தேசியத் தலைமையில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. அனைத்து தலைவர்களும் ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்கள், ராகுல் காந்தி பொறுப்பை ஏற்க வேண்டிய நேரம் இது என்று கூறினார்.
இந்தியா போன்ற ஒரு நாட்டில், ராகுல் காந்தியை போன்ற ஒரு தலைவரால் மட்டுமே அனைத்து பிரிவு மக்களின் நம்பிக்கையையும் பெற முடியும். எனவே, ராகுல் காந்தி தேசிய அளவில் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இந்தியாவின் நலன்களைப் பாதுகாத்து முன்னேற முடியும்.
தேசிய அளவில் 23 மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தேசிய தலைமைக்கு எழுதிய கடிதம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச்செயலாளராக பதிலளித்த உம்மன் சாண்டி, காங்கிரஸுக்குள் தலைமைத்துவ நெருக்கடி இல்லை. ராகுல் காந்தி தேசிய தலைமையை ஏற்க வேண்டும் என்றே அனைத்து காங்கிரஸ்காரர்களும் விரும்புகிறார்கள்.
ராகுல் காந்தி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க தயங்குகிறார், ஆனால் கட்சியின் பெரும்பான்மையான தலைவர்கள் அவர் வேண்டும் என்று நினைக்கிறார்கள். தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையில், ராகுல் காந்தி போன்ற ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். இந்தியா போன்ற பல தரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில், ராகுல் காந்தி மட்டுமே மக்களின் நம்பிக்கையை பெற முடியும், அவர்களுக்காக உழைக்க முடியும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இந்தியா மற்றும் அதன் மக்களின் நலன்களைப் பாதுகாத்து முன்னேற முடியும்" என்றார்.