தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கட்டாயத்தின் பேரில் நடக்கும் உடலுறவு வன்புணர்வாகக் கருதப்படும்' - கேரள உயர் நீதிமன்றம் - கேரள உயர்நீதிமன்றம் உடலுறவு பெண்கள் முழு விருப்பம்

திருவனந்தபுரம்: பெண்களின் முழு விருப்பத்தோடு நடக்கும் உடலுறவே பரஸ்பர புரிதலோடு நடக்கும் உடலுறவாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், கட்டாயப்படுத்தினால் வன்புணர்வாகக் கருத்தப்படும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரள உயர்நீதிமன்றம்
கேரள உயர்நீதிமன்றம்

By

Published : Jul 7, 2020, 11:59 AM IST

கேரளாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, 2009ஆம் ஆண்டு, பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கர்ப்பமாக்கிய குற்றத்துக்காக 59 வயது முதியவர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து, கேரள நீதிமன்றத்தில் அந்த முதியவர் மேல்முறையீடு செய்திருந்தார். கடந்த ஜூன் 29ஆம் தேதி நீதிபதி பி.எஸ். சுரேஷ் குமார் முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது மனுதாரர், "சிறுமியின் விருப்பத்துடனே நான் அவருடன் நெருக்கமாகப் பழகினேன். இது எப்படி குற்றமாகும்" எனக் கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமி, "நான் அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்றது உண்மைதான். ஆனால், அவரது விருப்பத்திற்கு ஏற்றார்போல நான் நடந்துகொண்டேன். என் தாய், சகோதரிக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்று தான் இப்படிச் செய்தேன்" என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "பெண்களின் முழு விருப்பத்தோடு நடக்கும் உடலுறவு மட்டுமே பரஸ்பர புரிந்துணர்வோடு நடக்கும் உடலுறவாக ஏற்றுக்கொள்ளப்படும். கட்டாயத்தின் பேரில் பெண்கள் ஒப்புக்கொண்டால் அது பாலியல் வன்புணர்வுவாகவே கருதப்படும்" எனக் கூறி குற்றவாளியின் மனுவை நிராகரித்து அவரது தண்டனையை உறுதிசெய்தார்.

இதையும் படிங்க : காவல் நிலையத்தில் உல்லாசமாக மது அருந்திய காவலர்கள் - வைரலாகும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details