இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கணொலிப் பதிவில், 'புதுச்சேரி மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதையடுத்து ரேபிட் டெஸ்ட் கிட்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு வந்துவிட்டன. மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் அவைப் பயன்படுத்தப்படும்.
'அவசர சிகிச்சைக்காக மட்டுமே வெளி மாநில நோயாளிகளை அனுமதிக்க வேண்டும்' - புதுச்சேரியில் கரோனா
புதுச்சேரி எல்லைக்குள் அவசர சிகிச்சைக்காக மட்டுமே வெளி மாநில நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மருத்துவமனைகளில் மொத்தம் 78 வென்டிலேட்டர்கள் உள்ளன. அதைத் தவிர்த்து ஜிப்மர் மருத்துவமனையில் 120 வென்டிலேட்டர்கள் கைவசம் உள்ளன’ எனத் தெரிவித்தார். அதையடுத்து அவர், 'வெளி மாநில நோயாளிகளை அவசரச் சிகிச்சைக்காக மட்டுமே புதுச்சேரி மாநில எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் 10 நாட்களும் புதுச்சேரி மாநில மக்கள் அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - அமைச்சர் உறுதி