மும்பை: “ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள் இருந்து, இருவரும் அவரது பணத்திற்கு உரிமை கோரினால், சட்டப்படி முதல் மனைவிக்கு மட்டுமே கணவரின் பணத்தில் உரிமை உண்டு” என்று மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆக.25) கூறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ரயில்வே போலீஸ் படையில் உதவி துணை ஆய்வாளராக சுரேஷ் ஹதங்கர் என்பவர் பணியாற்றிவந்தார். இவரது, இரண்டாவது மனைவி தாக்கல் செய்த மனுவை நீதிபதி கதவல்லா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அந்த மனுவில் சுரேஷின் இரண்டாவது மனைவி, “கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பணியில் இருக்கும் போது, இறக்கும் காவலர்களுக்கு ரூ.65 லட்சம் மாநில அரசு இழப்பீடு வழங்குகிறது.
ஆகவே தனது கணவரின் இறப்பினால் கிடைத்த தொகையில் தனக்கும் உரிமை உண்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி சுரேஷின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள் ஷ்ரத்தா மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் இன்று அறிவித்தனர்.