நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் எதிரொலியாக மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்துவந்த ஏராளமானோர் வேலைவாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளனர். கூலித் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி நடந்தவாறே பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவுக் குரல்களும் பெருகிவந்தன. இதனையடுத்து, குடிபெயர்ந்த தொழிலாளர்கள், ஆன்மிக யாத்ரீகர்கள், மாணவர்களைச் சொந்த மாநிலங்களுக்கு திருப்பியனுப்ப மத்திய உள்துறை அனுமதி அளித்தது. இதற்காக நாடு முழுவதும் ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியது.
இது தொடர்பாக ஊடகங்களை சந்தித்த அவர், “ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கோவிட்-19 பரவலை தடுக்க அரசு சொல்லி இருக்கும் விதிமுறைகள் பின்பற்றப்படும். கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியற்ற நபர்கள், முன்பதிவு உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுகள் உள்ளவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். காத்திருப்பு பட்டியலிடப்பட்டு பயணச்சீட்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை” என தெரிவித்தார்.
கரோனா பாதிப்பிருந்தால் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் பயணிக்க அனுமதியில்லை! பயணப்படும் அனைத்துப் பயணிகளும் “ஆரோக்ய சேது” செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை ரயில்வே அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க :இன்று முதல் சிறப்பு ரயில் சேவை: கட்டுப்பாடுகளுடன் அனுமதி!