தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கடும் கட்டுப்பாடுகளுடன் மெட்ரோ ரயிலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு! - கடும் கட்டுப்பாடுகளுடன் மெட்ரோ ரயிலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு!

டெல்லி: மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்து, பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடுகளுடன் மெட்ரோ ரயிலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு!
கடும் கட்டுப்பாடுகளுடன் மெட்ரோ ரயிலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு!

By

Published : Sep 2, 2020, 10:58 PM IST

இணையவழியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, செப்டம்பர் 12 முதல் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், "செப்டம்பர் 7ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவை படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும். மெட்ரோ சேவை தொடங்கியதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணிகள் கடைபிடிக்க வேண்டும். மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு முகக்கவசம் விற்பனை செய்யப்படும்" என்றார்.

மேலும், இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அவை பின்வருமாறு:

  • கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்படாது.
  • உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • பயணிகள், ரயில் நிலைய ஊழியர்கள், பாதுகாவலர்கள் என அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
  • செப். 7ஆம் தேதி முதல் சில பகுதிகளிலும், செப். 12ஆம் தேதி முதல் மற்ற அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
  • தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ரயில் பெட்டிகளுக்கு உள்ளேயும் குறியீடுகள் வரையப்பட்டிருக்கும்.
  • ஆரோக்கிய சேது செயலி (Aarogya Setu App) பயன்படுத்துவது ஊக்கப்படுத்தப்படும்.
  • ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர்கள் வைக்கப்பட்டிருக்கும்.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில், ரயில், சாதனங்கள், லிப்ட், தானியங்கி படிக்கட்டு, கழிப்பறை உள்ளிட்டவை சுத்தப்படுத்தப்படும்.
  • ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்.
  • டோக்கன்கள், பேப்பர் ஸ்லீப்கள், தூய்மையாக பயன்படுத்தப்படும்.
  • ரயிலில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ரயில் நிலையங்களில், பயணிகளுக்கு போதுமான நேரம் வழங்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் இறுதியிலிருந்து மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...பப்ஜி உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை!

ABOUT THE AUTHOR

...view details