உலகின் திசைகளை கரோனா பெருந்தொற்று மாற்றியமைத்துள்ளது. ஏழை பணக்காரர் என பாகுபாடு காட்டாமல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாதங்களாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஹரியானாவில் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் கல்வி, ஆன்லைன் வகுப்புகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என அரசு தெரிவிக்கிறது. ஆனால், தொலைதூர கிராமங்களில் தொழில்நுட்ப வசதிகள் தோல்வி அடைந்துள்ளன. இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான நூஹ் மாவட்டமும் அதில் விதிவிலக்கு அல்ல. கரோனா காரணமாக அரசு, தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.
இதனால் அங்கு முழு அமைதி நிலவிவருகிறது. ஏற்கனவே, கல்வித்துறையில் பின்தங்கிய மாவட்டமாக விளங்கும் நூஹ் மாவட்டத்தில், நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது.
இதுகுறித்து பெற்றோர் ஃபஜ்ருத்தீன் என்பவர் கூறுகையில், " குழந்தைகளால் படிக்க முடியவில்லை. கிராமப்புறங்களில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் குழந்தைகளால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை" என்றார்.
ஆன்லைன் வகுப்புகளை வெற்றிகரமாக மேற்கொள்ள நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, EduSAT, கேபிள் நெட்வொர்க், வாட்ஸ்அப் போன்ற வசதிகளை மாணவர்களுக்கு நிர்வாகம் வழங்கிவருகிறது.
61 விழுக்காடு மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை மேற்கொண்டுவருவதாக மாவட்ட கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் தயா பாரனா என்பவர் கூறுகையில், "பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்பட்டு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். கரோனா ஊரடங்கு காரணமாக குழந்தைகளின் கல்வி பாதிக்காதவாறு இருக்க ஆன்லைன் வகுப்புகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.