தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

டெல்லி: இந்தியா முழுவதும் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

onion

By

Published : Sep 22, 2019, 7:07 PM IST

பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இதனால் வெங்காயம் விளைச்சல் மற்றும் ஏற்றுமதியில் தொய்வு ஏற்பட்டிருப்பதால் இதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

குறிப்பாக, நாட்டின் தலைநகர் டெல்லியில் வெங்காயம் கிலோ ஒன்று 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய தலைநகரங்களிலும் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது..

சமையலுக்கு மிக அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் திடீரென உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details