அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையைத் தடுக்க, வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெங்காய இறக்குமதிக்கான விதிகளையும் மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கையால், வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.
ராக்கெட் வேகத்தில் உயரும் வெங்காய விலை - வெங்காயத்தின் விலை
டெல்லி: வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதை கருத்தில் கொண்டு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50க்கும், மும்பையில் ஒரு கிலோ ரூ.67க்கும், சென்னையில் ஒரு கிலோ ரூ.74க்கும் விற்கப்படுகிறது. நாட்டின் தென் மேற்கு மாநிலங்களில் அதிகளவில் மழை பெய்துவருவதால் வெங்காய இறக்குமதி சேவை தடைபட்டுள்ளது.
இந்தியாவில் அதிகளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.66க்கு விற்கப்படுகிறது. தென் மற்றும் மேற்கு மாநிலங்களில் பெய்த கனமழையால் காரீப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் உற்பத்தி செய்யும் பகுதிகளில் பெய்த கனமழையால், வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.