வெங்காயத்தின் விலை விண்ணைப் பிளக்கும் அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை அதிகரித்தும் உரிமம் இன்றி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
விண்ணைப் பிளக்கும் வெங்காய விலை! - வெங்காயம்
மும்பை: வெங்காயம் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலையை குறைக்க இறக்குமதி செய்வதை மத்திய அரசு அதிகரித்த போதிலும், அதன் விலையில் பெரிய மாற்றம் நிகழவில்லை.
கடந்த வாரம், வெங்காயம் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்பட்டது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், அது தற்போது 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கிலோவுக்கு 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
வெங்காயத்தின் விலை குறைந்த சந்தைகளில் இருப்பு அதிகப்படுத்தப்பட்டதை காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெங்காய வியாபாரி ஒருவர் கூறுகையில், "கடந்த மாதம், வெங்காயம் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மழையினால் சேதப்படுத்தப்பட்ட வெங்காயங்களே இறக்குமதி செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலை உயர்வால் நடுத்தர வர்க்கம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது" என்றார்.