தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோக நகை வியாபாரிகள் தங்கள் கடைகளின் பாதுகாப்பு கருதி எப்போதும் பாதுகாப்புக்கு ஆள் வைத்திருப்பார்கள். அந்த நிலை தற்போது வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. இந்த நேரத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹாடில்யா பகுதியிலுள்ள ஒரு கடையில் வெங்காயம் திருடப்பட்டது. இரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த திருடர்கள் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தை திருடி சென்றுள்ளனர்.
மேற்குவங்கத்தில் வெங்காயம் திருட்டு.! கொள்ளையர்களுக்கு வலைவீச்சு.! - வெங்காயம் திருட்டு
கொல்கத்தா: வெங்காயத்தின் விலையேற்றம் காரணமாக அது இன்னொரு தங்கமாக மாறி வருகிறது. இதன் நீட்சியாக மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு கடையில் திருடர்கள் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை திருடி சென்று விட்டனர்.
![மேற்குவங்கத்தில் வெங்காயம் திருட்டு.! கொள்ளையர்களுக்கு வலைவீச்சு.! Onion of rupees 50 thousand had been stolen from a shop at Haldia, East Midnapur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5209595-thumbnail-3x2-wbengal.jpg)
Onion of rupees 50 thousand had been stolen from a shop at Haldia, East Midnapur
இதுகுறித்து சுதாஹட்டா காவல் நிலையத்தில் காய்கறி வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு கடையில் மூன்று சாக்குகளில் வெங்காயம் திருடப்பட்டது. வெங்காயம் மட்டுமின்றி ஒரு குவிண்டால் இஞ்சியையும் அவர்கள் திருடியுள்ளனர். இதன் சந்தை விலை ரூ.3ஆயிரம்.
வெங்காயத்தை திருடு கொடுத்த கடைக்காரர்
இதையும் படிங்க: வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு!