ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலில், ஷாப்பிங் மாலில் வேலை செய்து கொண்டிருந்த தாமஸை, ஜோசப் என்பவர் பட்டப்பகலில் கத்தியால் குத்தி துடிதுடிக்க கொலை செய்தார்.
ஜோசப்பின் மனைவியும் கொல்லப்பட்ட தாமஸும் ஒரே ஷாப்பிங் மாலில் வேலை செய்துவந்தனர். ஜோசப் மற்றும் தாமஸ் இருவருக்கும் இடையே சிறிய மோதல்கள் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
துடிதுடிக்க கொலை:
இந்நிலையில், நேற்று(டிச.16) ஷாப்பிங் மாலிற்கு வந்த ஜோசப் , தாமஸை பேச அழைத்துள்ளார். அப்போது, பேச வந்த தாமஸை பட்டப்பகலில் நடுரோட்டில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால், நிலை தடுமாறி கீழே விழுந்த தாமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வைரலாகும் சிசிடிவி காட்சிகள்:
ஓங்கோல் படுகொலை: வைரலாகும் சிசிடிவி காட்சிகள் ஜோசப்பை கத்தியால் குத்தி கொலைசெய்த ஜோசப் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, ஜோசப் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா!