காஷ்மீர் மாநிலத்துக்குரிய 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டும், காஷ்மீர் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு நாளை 5ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஓராண்டு நிறைவு - மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா - 370ஆவது சட்டப்பிரிவு
புதுச்சேரி: காஷ்மீருக்கு மாநில சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவடைவதையொட்டி, அரசின் எந்தவித வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இதற்கு மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி பாரதி வீதி அலுவலகம் அருகே மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
அப்போது, இந்த மாற்றங்களினால் காஷ்மீர் மக்கள் மற்றும் இந்திய மக்கள் பெரும் நன்மையை அடையப் போகின்றனர் என மத்திய அரசு வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. ஆனால், ஓராண்டு கழித்து அரசு அளித்த வாக்குறுதிகளுக்கு எல்லாம் துரோகம் இழைத்துள்ளது அம்பலமாகிவுள்ளது என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.