மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் திருமலை நகரத்தைச் சேர்ந்த ரவி மஞ்சானியின் மகள் கிதிஷா. குழந்தையின் முதல் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட பெற்றோர் விரும்பினர். இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் இந்தூர் காவல் துறையின் உதவியை நாடினர்.
இந்த கோரிக்கைக்கு செவிமடுத்த காவல் துறையினர், குழந்தையின் பிறந்தநாளன்று வாழ்த்து பாடல் ஒலிக்க கேக்குடன் சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இது குறித்து கிதிஷாவின் தந்தை ரவி, “இப்போது என் மகளுக்கு ஒரு வயது நிறைவடைந்துவிட்டது. அவளின் முதல் பிறந்தநாளைக் காவல் துறையினர் மிகவும் சிறப்பானதாக மாற்றிவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி” என்றார்.