நாட்டின் முதல் பிரதமரான நேருவின் 130ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது.
அவரது பிறந்தநாளையொட்டி பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், சோனியா உள்ளிட்ட தலைவர்கள் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேருவுக்கு மரியாதை செலுத்தும்விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்தப் பதிவில்,
- "நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று அவரை நாம் அனைவரும் நினைவுகூருவோம். ஜவஹர்லால் நேரு ஒரு ராஜதந்திரி, தொலைநோக்குச் சிந்தனையாளர், அறிஞர், இந்தியா என்ற பல்கலைக்கழகத்தை கட்டமைத்தவர், நவீன இந்தியாவின் ஆகச்சிறந்த சிற்பிகளில் ஒருவர்" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜவஹர்லால் நேரு