தமிழ்நாடு

tamil nadu

கேரள மாநிலத்தில் இன்று ஒருவருக்கு மட்டுமே கோவிட்-19 உறுதி!

By

Published : Apr 17, 2020, 8:49 PM IST

கேரள மாநிலத்தின் மருத்துவத்தையும், கரோனா நோய்க் கிருமித் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் உலக நாடுகள் பாராட்டி வருகிறது. இச்சூழலில் கேரளாவில் இன்றும் ஒரு நபருக்கு மட்டுமே கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.

kerala corona updates in tamil
kerala corona updates in tamil

கேரள மாநிலத்தில் இன்று ஒரு நபருக்கு மட்டுமே கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஆவார். கரோனா கிருமித் தொற்று இருந்த நபரிடம் இருந்து, இவருக்கு பரவியிருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று 10 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். அதில் காசர்கோட்டைச் சேர்ந்த 6 பேர், எர்ணாகுளத்தைச் சேர்ந்த 2 பேர், மலப்புரம், ஆலப்புழாவில் இருந்து தலா ஒரு நபர் குணமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வரை 395 நோயாளிகளில், 255 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 138 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், 78 ஆயிரத்து 980 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 78 ஆயிரத்து 454 பேர் வீட்டிலும், மீதமுள்ள 526 பேர் மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 84 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்து 29 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அதில் 17 ஆயிரத்து 279 மாதிரிகளில் எந்த நோய்க் கிருமியின் தாக்கமும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details