மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 'ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு திட்டம்' அமலுக்கு வரும். இந்த திட்டம் மூலம், ஒரு குடும்ப அட்டை மூலம் தங்களின் பயன்களை பெறலாம். 12 மாநிலங்களில் ஜனவரி 1ஆம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வந்தது. பொது விநியோக திட்டத்தை பயன்படுத்துபவர்கள் திட்டம் அமலில் உள்ள ஏதேனும் ஒரு மாநிலத்தில் தங்கள் பயன்களை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.
அமலுக்கு வரும் 'ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு' - அமலுக்கு வரும் 'ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு'
பாட்னா: 'ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு திட்டம்' ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.
Paswan
'ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு' திட்டம் 2020ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் நோக்கம் சாதியை அறிவதே!