உணவு மற்றும் பொதுவிநியோக செயலர் ரவிகாந்த், நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாடு முழுக்க முதல்கட்டமாக 12 மாநிலங்களில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முதல்கட்டமாக ஜனவரி 1ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கேரளா, கோவா, மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது.
இது முதல்கட்ட பணிகள்தான். அடுத்தக்கட்டமாக ஜூன் மாதம் கூடுதலாக எட்டு மாநிலங்களில் இத்திட்டம் அமலுக்கு வரும். இத்திட்டத்தின் மூலம் 35 மில்லியன் மக்கள் பயன்பெறுகின்றனர்.