தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 17, 2019, 3:35 PM IST

ETV Bharat / bharat

'ஒரு நாடு, ஒரு தேர்தல்' தற்போதைக்கு வாய்ப்பில்லை - தலைமைத் தேர்தல் ஆணையர்

டெல்லி: ஒரு நாடு, ஒரு தேர்தல் என்ற நடைமுறை தற்போதைக்கு வாய்ப்பில்லை எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

Sunil arora

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மாணவர் மத்தியில் உரையாற்றிய அவர், 'ஒரு நாடு , ஒரு தேர்தல்' கொள்கையின் நடைமுறை சாத்தியம் குறித்துப் பேசினார்.

அதிகாரிகள் மட்டத்தில் செலவினங்களைக் குறைத்து நடைமுறையை எளிமைப்படுத்த 'ஒரு நாடு, ஒரு தேர்தல்' என்ற கொள்கைத் திட்டம் வரைமுறைபடுத்தப்பட்டது. ஆனால், இது நடைமுறை சாத்தியத்திற்கு வர அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார் அரோரா.

மேலும், வாக்குப் பதிவு இயந்திரம் அறிவியல் பூர்வமாகத் தயார் செய்யப்பட்ட கருவி. அதை யாராலும் துஷ்பிரயோகம் செய்ய முடியாது. தேர்தல் தேதியில் படித்த மேட்டுக்குடி வர்க்கத்தினரைக் காட்டிலும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாமர மக்களே வாக்களிக்கின்றனர் என்பதே இந்திய ஜனநாயகத்தின் வலிமை எனத் தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர், 'ஒரு நாடு, ஒரு தேர்தல்' என்ற கோஷத்தை தொடர்ச்சியாக முன்னிறுத்தி வருகிறது. இதற்காக அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டுவருகிறது மத்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'வரும் மார்ச் மாதத்திற்குள் தனியார் கையில் இருபெரும் பொதுத்துறை நிறுவனங்கள்' - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details