தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிரீஸில் ஹனிமூன் - திரும்பிய மாப்பிள்ளைக்கு கொரோனா வைரஸ் தொற்று! - கிரீஸூல் ஹனிமூனிலிருந்து திரும்பிய நபருக்கு கொரோனா

பெங்களூரு: கிரீஸ் நாட்டிலிருந்து திரும்பிய நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகாவின் மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா

By

Published : Mar 12, 2020, 11:26 PM IST

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. இதனால், தினந்தோறும் வெவ்வேறு மாநிலங்களில் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகாவில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்தாக மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் செய்தியாளர் சந்திப்பில் அதிகார்ப்பூர்வமாக தெரிவித்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், கிரீஸ் நாட்டில் தேனிலவை கொண்டாடிய நபர், பெங்களூருவில் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். சுமார் 154 ஊழியர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் அவர் நான்கு பேரை சந்தித்து பேசியது உறுதி செய்யப்பட்டு மருத்துவ கண்காணிப்பு வட்டத்துக்குள் எடுக்கப்பட்டுள்ளனர்.

ஆக்ராவில் உள்ள இவரின் மனைவியும் தனிமைப்படுத்தபட்டு சோதனை நடைபெற்று வருகிறது. நோயாளியுடன் தொடர்பு இருந்திருக்கலாம் என கருதப்படும் அனைவரின் பட்டியலும் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேர் சிறுநீரகக் கோளாறு பாதிப்பு -சிறுநீரகவியல் வல்லுநர்கள் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details