தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் கரோனாவால் முதல் உயிரிழப்பு

புதுச்சேரி: கேரளா அருகே உள்ள மாஹேவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 71 முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

corona death
corona death

By

Published : Apr 11, 2020, 5:40 PM IST

செருகல்லாய் பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவர், சிறுநீரக பாதிப்பு, இருதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மார்ச் 26ஆம் தேதி தலசேரியில் உள்ள டெலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், மார்ச் 31ஆம் தேதியன்று கடுமையான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமடைந்ததால் மிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர், கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கரோனா வார்டில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 7.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றால் முதல் பலி நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கிடைத்த தகவலின் படி, அவர் ஏராளமான மக்களுடன் தொடர்பு கொண்டிருந்துள்ளார். 71 வயதான இவர், திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். நியூ மாஹே, பனியன்னூர், சோக்லி ஆகிய இடங்களுக்கு பேருந்தில் இவர் பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர் உயிரிழந்ததையடுத்து இவர் வசித்து வந்த பகுதி மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஊரடங்கை தாமதம் செய்யாமல் நீட்டிக்க வேண்டும்’ - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details