தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு மாவோயிஸ்ட் உயிரிழப்பு! - மாவோயிஸ்ட் பலி

பாலக்காடு: கேரள வனப்பகுதியில் இரண்டாவது நாளாக நடைபெற்ற துப்பாக்கிச்  சண்டையில் இன்று ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

maoist

By

Published : Oct 29, 2019, 6:31 PM IST

தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் தண்டர்போல்ட் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுவருகின்றன. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்திற்குள்பட்ட மஞ்சகட்டி வனப்பகுதியில் தண்டர்போல்ட் படையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதில் கார்த்திக், சுரேஷ், ஸ்ரீமதி ஆகிய மூன்று மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய மாவோயிஸ்ட்களைத் தேடும் பணி இன்று நடைபெற்றது. இன்று மல்லீஸ்வரன்முடி வனப்பகுதியில், கேரள மாநில தண்டர்போல்ட் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், நேற்று காயத்துடன் தப்பிய மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் பவானி தளத்தின் தலைவராகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுட்டுக் கொல்லப்பட்ட மணிவாசகம்

நேற்றும் இன்றும் ஏராளமான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் உயிரிழந்த மாவோயிஸ்ட்டுகளின் உடல் உடற்கூறாய்வு செய்யப்படும் எனவும் கேரள காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாவோயிஸ்ட் இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details