தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக ஒரு லட்சம் வழக்குகள் தொடர காங்கிரஸ் திட்டம் - தேசிய குடிமக்கள் பதிவேடு

ஹைதராபாத்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஒரு லட்சம் பொதுநல வழக்குகள் தொடருவோம் என தெலங்கானா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸயீத் நிஜாமுதீன் தெரிவித்தார்.

'One Lakh Pils in Supreme Court against NRC,CAA'
'One Lakh Pils in Supreme Court against NRC,CAA'

By

Published : Dec 26, 2019, 9:51 PM IST

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தெலங்கானா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸயீத் நிஜாமுதீன் ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) ஆகியவற்றிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு லட்சம் பொதுநல வழக்குகள் தொடருவோம். தற்போதுவரை ஹைதராபாத்திலிருந்து ஐந்தாயிரம் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக ஒரு லட்சம் வழக்குகள் தொடர காங்கிரஸ் திட்டம்
என்.ஆர்.சி., சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடருவோருக்கு உதவிகள் அளிக்கப்படும். வழக்காளர்களின் நிதி சுமை (நீதிமன்ற செலவுகள்) ஏற்கப்படும். வருங்காலத்தில் பாஜகவால் சீக்கியர்கள் குறிவைக்கப்படுவார்கள்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details