தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதியில் கார் மோதி சிறுவன் பலி; பெற்றோர் கண் முன் நேர்ந்த சோகம்! - கார் மோதி சிறுவன் பலி

திருப்பதி: கோயிலுக்கு சென்று திரும்பிய சிறுவன் கார் மோதி பலியான சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி

By

Published : Jun 18, 2019, 6:31 PM IST

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பாபு - இந்துமதி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் திருப்பதி பெருமாள் கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளனர். தரிசனம் முடிந்து திரும்பும் வழியில் கார் ஒன்று, பாபுவின் இளைய மகன் மீது மோதியுள்ளது.

பின்னர் மருத்துவமனையில் சிறுவனை சோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்திவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மகனின் மரண செய்தியைக் கேட்ட பாபுவும், இந்துமதியும் மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளனர்.

திருப்பதியில் கார் மோதி சிறுவன் பலி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விபத்து தொடர்பாக நடத்திய விசாரணையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநருக்கு கடந்த ஆறு வருடக்களாக வலிப்பு நோய் இருந்தது தெரியவந்தது. ஆனால் அவரின் ஓட்டுநர் உரிமம் 2016ஆம் ஆண்டு புதிப்பிக்கப்பட்டுள்ளது. வலிப்பு நோய் உள்ள ஒருவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு, அவர் விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details