மத்தியப் பிரதேசம் சிங்க்ராலியின் சாசன் பகுதியில் இயங்கும் ரிலையன்ஸ் மின் நிலையத்தின் சாயப்பட்டறை இடிந்த விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்து வெளியான நச்சு சாம்பல் குழம்பு வெள்ளம் போல் உருவாகி, அப்பகுதியில் சென்றவர்களை அடித்துச் சென்றது.
சாயப்பட்டறை இடிந்து விழுந்து விபத்து இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், சாம்பல் குழம்பில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், இரண்டு நபர்களை உயிரிழந்த நிலையில் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இருப்பினும் நால்வரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த மீட்பு முயற்சியில், மாநில பேரிடர் மீட்பு படை (SDRF), தேசியப் பேரிடர் மீட்பு படை(NDRF) ஆகியோர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து களமிறங்கியுள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தனது ட்விட்டர் பக்கத்தில், " இந்த விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மாநில அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.
இதுகுறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார். கடந்த ஒரு வருடத்திற்குள் சிங்க்ராலியில் மூன்றாவது முறையாக இதுபோன்ற விபத்து நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முழு அடைப்பின்போது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?