தெலங்கானா மாநிலம், ஸ்ரீசைலத்தில் அரசு மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், இன்று (ஆக. 21) நள்ளிரவு, இம்மின் நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் மின் நிலையத்தின் உள்ளே சிக்கியிருந்த ஒன்பது பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ஆறு பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று பேரின் உடல்களை மீட்கும் பணியில் சி.ஐ.எஸ்.எஃப்.(CISF) படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.