தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துப்பாக்கியைக் கொண்டு மிரட்டி மணல் அள்ளிய கும்பலைப் பிடித்த காவலர்கள் - வாகனங்கள் பறிமுதல்

போபால்: நர்மதை ஆற்றுப்படுகையில் துப்பாக்கியால் மக்களை மிரட்டி சட்டவிரோதமாக மணல் அள்ளிய கும்பலைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

one-arrested-for-carrying-out-illegal-sand-mining-in-madhya-pradesh
one-arrested-for-carrying-out-illegal-sand-mining-in-madhya-pradesh

By

Published : Jul 25, 2020, 2:12 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்திலுள்ள அல்கன்ஜ் கிராமத்தில் நர்மதை ஆற்றுப்படுகையில் சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளிவந்தனர். இந்நிலையில், அக்கிராம மக்கள் ஆற்றின் ஆழம் தொடர்ந்து குறைந்துவருவதாகக் கூறி, மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அப்பகுதி மக்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ரைசன் மாவட்டக் காவல் துறையினருக்கு இச்சம்பவம் குறித்து புகாரளித்தனர்.

புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், மணல் அள்ளிக்கொண்டிருந்த ராஜேந்திர ரகுவன்ஷி என்ற ஒப்பந்ததாரர் உள்ளிட்ட சிலரைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்துப் பேசிய ரைசன் மாவட்ட ஆட்சியர் உமாஷங்கர் பார்கவ், "கிராமவாசிகளை மிரட்டியவர்களைக் காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணைக்குப் பின்னரே மற்ற விவரங்கள் குறித்து தெரிவிக்க முடியும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details