தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள கர்ப்பிணி யானை கொலை - விவசாயி ஒருவர் கைது - Kerala forest minister K. Raju

திருவனந்தபுரம்: கர்ப்பிணி யானை வெடியை உட்கொண்டதால் உயிரிழந்த விவகாரத்தில் விவசாயி ஒருவரை கேரள காவல்துறை கைதுசெய்துள்ளது.

elephant
elephant

By

Published : Jun 5, 2020, 1:46 PM IST

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அம்பலபாரா என்ற பகுதியில் உணவு தேடி வந்த கர்ப்பிணி யானை வெடி வைத்திருந்த அன்னாசி பழத்தைச் சாப்பிடதால் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய விவசாயி ஒருவரை கேரள காவல்துறை நேற்று கைது செய்து விசாரித்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் வனத்துறை அமைச்சர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.

இந்த விவசாயி மலப்புரத்தைச் சேர்ந்தவர் எனவும், தற்போது அம்பலபாராவில் விவசாயம் மேற்கொண்டுவருகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் காவல்துறையினர் தேடிவருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:காணொலி: வெள்ளை நிற மலைபாம்பை, புடலங்காய் போல் தூக்கிய இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details