தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - மைக் பென்ஸ்

இன்றைய நிகழ்வுகளின் சுருக்கங்களை காணலாம்.

On This Day: Today's News Headlines from Tamilnadu  India & World  NewsToday  இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு
On This Day: Today's News Headlines from Tamilnadu India & World NewsToday இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு

By

Published : Oct 7, 2020, 6:56 AM IST

  1. இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் இன்று (அக்.7) அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் கட்சிக்கு ஒரே தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்வார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
    அதிமுக தலைமையகம்
  2. இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது.
    ஐபிஎல்
  3. ரிசர்வ் வங்கிக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நிதிக் கொள்கை குழுவின் ஆலோனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.
    ஆர்.பி.ஐ.
  4. அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர், உட்டாவில் உள்ள, 'சால் லேக் சிட்டி'யில், இன்று(அக்.,7) அனல் பறக்கும் விவாதம் நடத்த உள்ளனர்.
    கமலா ஹாரிஸ்
  5. சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை கோரும் வழக்கு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்புகள் நடத்த தடை கோரிய வழக்கு, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, ஊரடங்கு காலத்தில் மின் கட்டண நிர்ணயத்தை உறுதி செய்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய வழக்கு, கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ண சந்திரன் நியமனத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய வழக்கு, நடிகர் விஷாலின் சக்ரா திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடைக்கோரிய வழக்கு உள்ளிட்டவை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்குகளாகும்.
    சென்னை உயர் நீதிமன்றம்
  6. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details