முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு 1998ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முதல் அணு குண்டு சோதனை இந்தியாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இது உலக நாடுகள் பலவற்றையும் இந்தியாவை நோக்கி பார்வையைத் திரும்ப வைத்தது.
இந்தியாவின் மாபெரும் சாதனை நாளான இத்தினத்தை நினைவுகூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 11ஆம் நாள் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, தேசிய தொழில்நுட்ப தினத்தன்று, மற்றவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துகின்ற அனைவருக்கும் தேசம் இந்நாளில் வணக்கம் செலுத்துகிறது. அதுமட்டுமின்றி, 1998ஆம் ஆண்டு உலக நாடுகள் சற்றும் எதிர்பாராத அணு குண்டு சோதனையை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் சாதனைகளையும் நினைவுகூர்வோம்.
இன்று, கரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து உலகைக் காக்கும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுவரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நான் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். ஆரோக்கியமான உலகை உருவாக்கும் வகையில் நாம் அனைவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்திவருவதாக தான் நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனாவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே தீர்வு'- அமெரிக்க இந்திய ஆராய்ச்சியாளர் தகவல்