தமிழ்நாடு

tamil nadu

2ஆம் நாளில் 41 ஆயிரம் பயணிகள் - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பெருமிதம்

By

Published : May 27, 2020, 11:22 AM IST

டெல்லி: உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்ட இரண்டாம் நாளில் 608 விமானங்கள் மூலம் 41,673 பயணிகள் பயணம் செய்ததாக விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

domestic flights
domestic flights

இந்தியாவில் மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு காரணமாக விமானப் போக்குவரத்து முடங்கப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த திங்கள்கிழமை உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

முதல் நாளில் 832 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், இதன் மூலம் 58,318 பயணிகள் பயணம் செய்ததாகவும் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மேலும், வரும் காலங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்று, உள்நாட்டு விமான போக்குவரத்து சுமுகமாக நடைபெறுகிறது என்றும் மாலை 5 மணி வரை 608 விமானங்கள் இயங்கப்பட்டுள்ளதாகவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். இதன் மூலம் 41,673 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இந்தியாவில் ஆந்திரா, மேற்கு வங்கத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் திங்கள்கிழமை முதல் பயணிகள் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் நேற்று விமானச் சேவை தொடங்கப்பட்டது. அதேபோல மேற்கு வங்கத்தில் நாளை விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது.

டெல்லியில் 135 விமானங்கள் தரையிறங்கவும் 140 விமானங்கள் புறப்படவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவற்றில் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இது குறித்து EaseMyTrip.com நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிஷாந்த் பிட் கூறுகையில், "திங்கள்கிழமையுடன் ஒப்பிடுகையில் நேற்றைய விமானச் சேவை சுமுகமாக இருந்தது. இருப்பினும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளானார்கள்.

பல்வேறு மாநிலங்களும் விமான போக்குவரத்தில் தளர்வுகளை அறிவித்துவருவதால் வரும் காலங்களில் விமானப் போக்குவரத்து அதிகரிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: அவசரமாக தரையிறங்கிய ஏர்ஏசியா விமானம்!

ABOUT THE AUTHOR

...view details