கரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 25ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இருந்தும் கரோனா வைரஸ் பரவலின் வீரியம் குறையாத நிலையில் மேலும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை மத்திய அரசு அனுமதித்துள்ளது.
அதில் கரோனா ஹாட்ஸ்பாட்கள் இல்லாத இடங்களில் மதுபானக் கடைகள் திறக்கலாம் என கூறியது. அதனைத் தொடர்ந்து நேற்று டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் காலையிலிருந்தே மது பிரியர்கள் மதுபானங்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று மட்டும் கர்நாடகாவில் ரூ.45 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அம்மாநில அமைச்சர் நாகேஷ் பேசுகையில், ''அடுத்த வாரம் முதல் அனைத்து மதுபானங்களின் கட்டணங்களும் உயரும். மாநில பட்ஜெட்டில் கூடுதல் கலால் வரியில் 6 சதவிகிதம் உயர்த்த முன்மொழியப்பட்டது. அதனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஊரடங்கு காரணமாக அமல்படுத்த முடியவில்லை.