வட கரோலினாவில் உள்ள டியூக் லெமூர் மையத்தில் (டி.எல்.சி.) ஆயே ஆயே என்ற அரியவகையைச் சேர்ந்த உயிரினம் பராமரிக்கப்பட்டுவருகிறது. இதன் தோற்றம் பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் இந்த உயிரினம் தீமையின் (evil) சகுனம் என்று அழைக்கப்படுகிறது. ஆயே-ஆயே விசித்திரமான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்கிறது.
இவை சிறு, சிறு பூச்சிகள், புழுக்களை உணவாகக் உட்கொள்ளும். சிறிய பொந்துகள், மரங்களில் உள்ள சிறிய துளைகளில் பதுங்கியிருக்கும் பூச்சிகளைத் தேடி உண்ணும். இவை இரவு நேரங்களில் மட்டும் வேட்டையாடும் திறன் கொண்டவை. இதன் விரல்கள் மிகவும் நீளமாக பார்ப்பதற்கே கொடூரமாகக் காட்சியளிக்கும்.