இந்தியர்கள் பாதிப்பிற்குள்ளாகும்போது அமைதியாக இருந்துவிட்டு, ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கறுப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்களைக் கேலிசெய்து, தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.
அதில், ”அமெரிக்க உயிர்களுக்காக, உங்கள் கோழைத்தனத்தைக் கலைந்து தைரியமாக முன்வந்து ட்வீட் செய்கிறீர்கள். ஆனால், இந்திய உயிர்களுக்காக உங்களால் ஒருபோதும் ட்வீட் செய்ய முடிவதில்லை. ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ் என ட்வீட் செய்யும் அனைத்து பிரபலங்களின் மீதும் பெருமதிப்பு கொள்கிறேன்” என உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.