ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் அவரின் தந்தை பரூக் அப்துல்லா ஆகியோர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த காவலுக்கு எதிராக ஒமர் அப்துல்லாவின் சகோதரி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் உதவியுடன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியான பிரிக்கப்பட்டு, அதன் சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களாக பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்ஃதி ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
ஒமர் அப்துல்லா வீட்டுச் சிறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு - ஜம்மு காஷ்மீர், பொது பாதுகாப்புச் சட்டம், ஒமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்ஃதி, உச்ச நீதிமன்றம், வழக்கு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவின் வீட்டுச் சிறைக்கு எதிராக அவரது சகோதரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Omar Abdullah's sister moves SC challenging his detention under PSA
இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்தச் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது'