ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இவர்களின் கைது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டன. இதையடுத்து கடந்த மார்ச் 13ஆம் தேதி பரூக் அப்துல்லா வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து மற்ற தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.