அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளை அதிகரிக்கும் நோக்கில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்திற்கு 15 மக்களவை உறுப்பினர்களை சபாநாயகர் ஓம் பிர்லா நியமித்துள்ளார்.
முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா, மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங், மக்களவை உறுப்பினர்கள் முகமது அக்பர் லோன், ஹஸ்னைன் மசூதி, ஜுகல் கிஷோர் சர்மா, ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் மார்ச் 7ஆம் தேதி ஓய்வுபெற்ற, உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டது.