தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைதராபாத் பெருமழை : நாசமான ஒலிம்பிக் நாயகனின் கனவு! - ஹைதராபாத் பெருமழை

ஹைதராபாத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக பிரபல துப்பாக்கிச் சூடும் வீரர் ககன் நரங்கின் அகாதமியில் மழை நீர் புகுந்து, சுமார் 1.3 கோடி ருபாய் மதிப்பிலான துப்பாகிகள் நாசமாகியுள்ளன.

Gagan Narang
Gagan Narang

By

Published : Oct 16, 2020, 3:29 PM IST

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி கனமழை பெய்தது. குறிப்பாக, ஹைதராபாத்தில் இந்த கனமழை காரணமாக நகர் முழுவதும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

மாலை வேளையில் தொடங்கிய கனமழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் நகரிலுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்த கனமழையால் ஹைதராபாத்தின் கச்சிபோலி என்ற இடத்திலுள்ள பிரபல துப்பாக்கிச் சூடும் வீரர் ககன் நரங்கின் அகாதமியில் மழை நீர் புகுந்துள்ளது.

இந்நிலையில், இதில் சிக்கி சுமார் 1.3 கோடி ரூபாய் மதிப்பிலான துப்பாக்கிகள் நாசமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "கச்சிபோலியுள்ள எனது துப்பாக்கி சூடும் அகாதமிக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெர்மனியிலிருந்து உபகரணங்களை வாங்கினோம்.

ஹைதராபாத்தில் பெய்த கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை எனது உபகரணங்கள் தற்போது எட்டு அடி நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 1.3 கோடி ரூபாய் மதிப்பிலான 90 துப்பாக்கிகள் நீரில் மூழ்கின.

வெள்ளத்தில் மூழ்கிய ககன் நரங்கின் அகாடமி

நாங்கள் இப்போது அவற்றை உலர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அவற்றில் எத்தனை வேலை செய்யும், எத்தனை சேதமடைந்துள்ளன என்று இப்போது எங்களுக்கு தெரியவில்லை. இதுபோன்ற பேரழிவை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இதனால் காப்பீடு எதையும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை ககன நரங் வென்றிருந்தார். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்றுள்ள இவர், பத்மஸ்ரீ மற்றும் கேல் ரத்னா விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஹைதராபாத் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர்!

ABOUT THE AUTHOR

...view details