தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்து முறைப்படி மீண்டும் திருமணம் - எல்லைகளைத் தாண்டிய காதல் கதை

குஜராத்: 60 வயது முதியவருக்கு இளம்வயது ஜெர்மனி பெண் மீது காதல் ஏற்பட்டு இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

ஜெர்மனி பெண்ணின்
ஜெர்மனி பெண்ணின்

By

Published : Jan 24, 2020, 3:12 PM IST

குஜராத் மாநிலம், ஜுனகத்தை பூர்வீகமாகக் கொண்ட நிதின் பாய் என்பவர் பகவ்தீன் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி சென்று, தனது தொழிலைத் தொடங்கியுள்ளார். அதன் பின்பு 2002இல் மொரிஷியஸில் குடிபெயர்ந்த நிதின்பாய், ஜெர்மன் பெண் ஆலனை அங்கு சந்தித்துள்ளார். பின்பு இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இந்த அன்பு அவர்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது.

ஜெர்மனி பெண்ணின்

2010 ஜனவரி 22ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் உள்ள சிவில் திருமண நீதிமன்றத்தில் பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. பின்பு இருவரும் ஜெர்மனிக்குச் சென்று அங்குள்ள சட்டப்படி திருமணப் பதிவு செய்தனர். ஆனால், இந்து வேதங்கள் முழங்க திருமணம் நடக்காதது நிதின் பாய்க்கு ஒரு குறையாகவே இருந்திருக்கும்போல. பின்பு இந்து வேதங்கள் முழங்க திருமணம் செய்ய முடிவு எடுத்த அத்தம்பதி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்து மரபுப்படி திருமணம் செய்துகொண்டனர். இதில் நிதின்பாயின் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இந்து முறைப்படித் திருமணம்

ABOUT THE AUTHOR

...view details