தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களை கவர்ந்து வரும் கொல்கத்தா ட்ராம் வண்டிகள் - கொல்கத்தா ட்ராம்வேஸ் கம்பெனி

கொல்கத்தாவில் பொதுமக்களை கவரும் வகையில், பழைய ட்ராம் வண்டிகள் அம்மாநிலத்தின் இசை, பாரம்பரியத்தை உணர்த்தும் வகையிலான அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

புத்துயிர் பெற்ற ட்ராம் வண்டிகள்
புத்துயிர் பெற்ற ட்ராம் வண்டிகள்

By

Published : Dec 23, 2020, 5:28 PM IST

கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பழைய ட்ராம் வண்டிகளை அம்மாநில போக்குவரத்து கழகம் மக்கள் பார்வையிடும் அருங்காட்சியமாக மாற்றியுள்ளது. 'ட்ராம் வேல்ட்' எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், இளைஞர்களை கவரும் வகையில் மாநிலத்தின் பாரம்பரியத்தை உணர்த்தும் பழையப் பொருட்கள், ஆடைகள், புகைப்படங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா ட்ராம்வேஸ் கம்பெனியின் 140ஆம் ஆண்டு நிறைவையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த இந்த நிறுவனத்தால் 1880ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி கொல்கத்தாவில் ட்ராம் வேல்ட் கொல்கத்தா தொடங்கப்பட்டது. தற்போது நாட்டில் ட்ராம் சேவை பயன்பாட்டிலுள்ள ஒரே நகரம் கொல்கத்தாவாகும்.

இன்று முதல் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், காலை 10 முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு பார்வையிட வருவோரிடம் நுழைவுக் கட்டணமாக 30 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:காங்கிரஸ் மூத்தத் தலைவர் மறைவு! - பாஜக இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details