ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே பெடரு பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பிபிஇ உடையணிந்து சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த உடை அணிந்து சாலையில் சென்றுகொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.
'எனக்கு பயங்கரமான ஜலதோஷம்... அதான் ஏற்கனவே யூஸ் பண்ண பிபிஇ உடையை அணிந்தேன்' - விசாகப்பட்டினம்
மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஏற்கனவே உபயோகப்படுத்திய பிபிஇ உடையை முதியவர் ஒருவர் அணிந்துகொண்டு சாலையில் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
Old man
இதையடுத்து இதுதொடர்பாக ஒருசிலர் அவரிடம் விவரம் கேட்கவே, தனக்குக் கொஞ்ச நாள்களாக கடுமையான ஜலதோஷம் பிடித்திருப்பதால் பிபிஇ உடையை அணிந்திருப்பதாகக் கூறியுள்ளார். அந்த உடை எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு, மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஏற்கனவே பயன்படுத்தியை எடுத்து தான் அணிந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த உடை வேறொருவர் அணிந்திருந்ததால் அதன்மூலம் கரோனா பரவ வாய்ப்பிருக்கிறது என்று முதியவரிடம் கூறிய அவர்கள், அதனை உடனடியாக எரிக்கமாறும் வலியுறுத்தினர்.